Friday, 6 January 2017

Feedbackform

Send email via Gmail SMTP server in PHP

Gnanasekaran Sivakumar FeedBack Form


Hi friends,Welcome to my Feedback Form

Friday, 6 May 2016

Technical updates


ஒரு தாயின் அறிவுரை

ஒரு தாயின் அறிவுரைதிருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1.
அம்மா புராணம் பாடாதே!

2.
அம்மாவோடு ஒப்பிடாதே!

3.
அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

4.
அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

5.
அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பின் குறிப்பு :- மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்...!




Photo:
ஒரு தாயின் அறிவுரைதிருமணமாகப் போகும் தன் மகனுக்கு: திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்! பெஸ்ட் அம்மா பெஸ்ட்! இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்! இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய். தாய்க்குப் பின் தாரம்! நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா? காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு. தாயா? தாரமா? அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை! அம்மாவின் கட்டளைகள் ஆறு! உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு: 1. அம்மா புராணம் பாடாதே! 2. அம்மாவோடு ஒப்பிடாதே! 3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது! 4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்! 5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை! உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்! பின் குறிப்பு :- மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்...!